Wednesday, April 8, 2009

அயன் - மற்றுமொரு கமர்ஷியல் மசாலா!

இது என்னோட முந்தின பதிவு மாதிரி காமெடி பதிவு இல்ல.. படத்த போன வாரம் பார்த்துட்டு வந்து என்னோட கருத்த சொல்றேன்.. நீங்க உங்க கருத்தையும் சொல்லுங்க..

போன வாரம் எப்படியோ பிளாக்ல டிக்கெட் வாங்கிட்டு போய்ட்டோம் நானும் என் நண்பனும்.. நம்ம ஏரியால நம் தமிழ் மக்கள் கொஞ்சம் அதிகம்ல..

ஆனா போன உடனே படத்த போட்டதும் ஒரு ஆறுதல்.. டொகும்ன்ட்ர்யும், விளம்பரமும் போட்டு அறுக்காம avm, sun pictures லோகோஸ் வந்ததும் விசில் ஆரம்பிச்சது.. கிளைமாக்ஸ் வரைக்கும் நிக்கல.. அவ்வளவு பக்க கமர்ஷியல்..

இந்த படத்தோட கதை (ரொம்ப பெருசா இல்லைனாலும்) இந்நேரம் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.. அதனால நான் கதை பத்தி பேச போறதில்ல..
இந்த மாதிரி படத்துக்கு தேவையான கதை.. அவ்ளோ தான்...




படத்தோட
ப்ளஸ்..

சூர்யா.. சூர்யா.. சூர்யா..

அவர் எந்த கேரக்டரும் செய்வாருன்னு இன்னொரு முறை காட்டி இருக்கார்..
அவர் செய்ற action, comedy, stunt, dance, style, dressing எல்லாமே சூர்யா சூர்யா தான்னு சொல்லும்..

அப்புறம் படத்துல வர்ற stunts.. சும்மா சொல்ல கூடாது congo-ல நடக்கிற அந்த ஃபைட் சீன் சூப்பரா இருக்கும்.. படம் முழுவதும் சேசிங், கடத்தல்னு விறுவிறுப்பா போறதால போர் அடிக்காம போகுது..

அப்புறம் இன்னொரு ப்ளஸ் பாடல்கள்.. எனக்கு ஹனி, ஹனி தவிர எல்லா பாடும் புடிசிருண்டது.. நெஞ்சே நெஞ்சே பாடல் ஹிந்தி கஜினி ல வர்ற குஸாரிஷ் பாட்டு மாதிரி இருந்தாலும் சூர்யா தமன்னா நல்லா பண்ணி இருந்தாங்க..

படத்தோட பெரிய ப்ளஸ் ஒளிப்பதிவு.. கே வி ஆனந்த் டைரக்ட் பன்னதாலோ என்னவோ ரொம்பவே நல்லா இருந்தது..

தமன்னா கொடுத்த வேலைய ரொம்பவே சூப்பரா பண்ணி இருந்தாங்க.. வெயிலுக்கு ரொம்ப இதம்.. :P

சொல்ற மாதிரி இன்னொரு கேரக்டர்னா நம்ம விஜய் டிவி ஜெகன்.. நல்லா பண்ணி இருந்தார்..

டிரெக்ஷன் நல்லா பண்ணி இருந்தார்.. கனா கண்டேன் அளவுக்கு இல்லனாலும் ஓகே..


இப்போ படத்தோட மைனஸ்..

பெரிய மைனஸ்னா படத்துல வர்ற cliche-கள்.. அடுத்த சீன் இது தான்.. இவர் தான் காட்டி கொடுப்பார்.. அம்மா செண்டிமெண்ட்.. இன்டெர்வல்க்கு அப்புறம் ஹீரோயின் காணாம போறது.. தேவை இல்லாத எடத்துல item song..இப்படி நிறைய..

அப்புறம் re-ரெகார்டிங்.. சம்மந்தமே இல்லாம கிளைமாக்ஸ்ல ஒரு மியூசிக் போட்டிருப்பார் பாருங்க.. செம காமெடி.. ஹாரிஸ் re-ரெகார்டிங்ல இன்னும் கொஞ்சம் மெனகெடலாம்..

பிரபு ஒரே மாதிரி கேரக்டேர்ல நடிக்கிற மாதிரி இருக்கு..

இன்னொரு பெரிய மைனஸ் வில்லன்.. அவர பார்த்த காமெடி தான் வருது.. ப்ரித்விராஜ வில்லனா அறிமுக படுதினவர் இதுல கோட்டை விட்டுட்டார்..


மொத்ததுல ஒரு மூணு மணி நேரம் ஜாலியா இருந்துட்டு வரலாம்.. சூர்யாக்காகவே ஒரு முறை கண்டிப்பா பார்க்கலாம்..

Friday, April 3, 2009

சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆனால்..

இது எனக்கு வந்த ஒரு இமெயில்.. நீங்கள் ஏற்கனவே படித்திருந்தால் பொறுத்தருள்க.. :)

நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக இருந்தா எப்படிலாம் டயலாக் விடுவார்னு ஒரு சின்ன கற்பனை..



பக் எப்ப வரும், எப்படி வரும்ன்னு யாருக்கும் தெரியாது ஆனா,
வர வேண்டிய நேரத்துல கரெக்டா வந்துடும்


-----

நீ விரும்புற ப்ராஜக்ட்ல ஓர்க் பண்ணுறத விட
உன்னை விரும்பற ப்ராஜக்டல ஒர்க் பண்ணினா

உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்.

-----

கஷ்டப்படாம பிக்ஸ் பண்ணுற பக் க்ளோஸ் ஆகாது

அப்படி க்ளோஸ் ஆனாலும் ரீ-ஓபன் ஆகாம போகாது.

-----

ப்ரோமோஷன், ஹைக், ஆன்சைட் இது பின்னாடி நாம போக கூடாது
இதெல்லாம்தான் நம்ம பின்னாடி வரணும்


-----


கை அளவு லாஜிக் எழுதினா,
அது நம்ம காப்பாத்தும்

அதுவே கழுத்தளவு எழுதினா,
அதை நாம காப்பாத்தணும்.


-----


மேனேஜர், ஃப்ரஷ்ஷரை ரொம்ப சோதிப்பான்

ஆனா கைவிட மாட்டான்.

எக்ஸ்பிரியன்ஷுக்கு நிறைய கொடுப்பான்

ஆனா கை விட்டுடுவான்.


-----

அசந்தா அடிக்குறது கவர்மெண்ட் பாலிஸி

அசராம அடிக்குறது சத்யம் பாலிஸி


-----

டெவலப்பர் டீம் போடுறது, லாஜிக் கணக்கு

டெஸ்ட்டர் டீம் போடுறது, டிஃபக்ட் கணக்கு

மார்க்கட்டிங் டீம் போடுறது, ப்ராஜக்ட் கணக்கு

மேனேஜ்மெண்ட் டீம் போடுறது, ரெவன்யூ கணக்கு

ஹெ.ஆர். டீம் போடுறது, தலை கணக்கு

சிஸ்.அட்மின் டீம் போடுறது, வலை கணக்கு

சேல்ஸ் டீம் போடுறது, விற்பனை கணக்கு

ரிசர்ச் டீம் போடுறது, கற்பனை கணக்கு

கூட்டி கழிச்சி பாரு!
கணக்கு சரியா வரும்!


-----
லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட்


அதிகமா பெஞ்ச்ல இருக்குற எம்ப்ளாயும்

அதிகமா லே-ஆஃப் பண்ணுற முதலாளியும்

நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை.


--------------

சூப்பர் ஸ்டார் டயலாக் எங்கேயும் பொருந்தும்..
அதுக்கு இது ஒரு எடுத்து காட்டு..


பின்னூட்டத்துல பின்னுங்க..

அயன் - இது தானா?

அனைவரும் ஆவலுலடன் எதிர் பார்க்கும் அயன் படம் பற்றி எழுதனும்னு எனக்கும் ஆசை தான்..

என்னங்க பன்றது.. நான் இன்னும் படம் பார்க்கலயே...

அதனால சில புகைப்படங்கள் மட்டும்...


எப்படிலாம் அயன் பன்னலாம்னு..



புரியலையா
? நாம iron பன்றது எப்படின்னு பார்போம்..



இது சாதா அயன்...


இது க்ளோஸ் அயன்..


இது சூடான அயன்...

இது தான் நம்ம ஊரு அயன்..


(டிஸ்கி: இந்த பதிவுக்கும் ஏப்ரல் 1க்கும் எந்த சம்மந்தமும் இல்ல... :) )


பின்னூட்டத்துல பின்னுங்க..

Thursday, March 19, 2009

எதை கிறுக்குவது?

காலைல ஆபீஸ் வந்ததும் என்னமோ தெரியல.. ஏதாவது கொலை பண்ணனும் போல வெறி.. ரொம்ப நேரமா யோசிச்சு சரி நாம ப்லாக் எழுதலாம்னு முடிவெடுத்தேன்.. :)



அப்புறம் நமக்கு தான் ஏற்கனவே blog இருக்கேனு லாகின் பண்ணி பார்த்தா நான் படித்து ரசித்த 2 ப்லாக்கெர்ஸ் (விக்னேஷ்வரன் மற்றும் கார்க்கி) என்னோட முதல் பதிவுக்கு பின்னூட்டம் இட்டிருந்தார்கள். தலை கால் புரியல.. நிஜமாங்க.. சொன்ன நம்பனும்.. அப்புறம் இப்போ கைல எழுதரிய இல்ல வேற எதுலயாவது எழுதரியனு கேக்க கூடாது.. நான் பாவம்ல..

சரி இன்னைக்கு கண்டிப்பா ஏதாவது கிறுக்கியே ஆகனும்னு முடிவு பண்ணிட்டேன்.. நான் ஒரு முறை முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேக்க மாட்டேன்.. எப்படி இருந்தாலும் மத்தவங்க கேக்க மட்டங்கனு எனக்கு தெரியுமே.. தெரியுமே.. :)



இதனால சகலமானவருக்கும் அடியேன் தெரிவிப்பது என்னன்னா நான் எந்த டாபிக்ல blog எழுதறதுனு தெரியாம பேந்த பேந்த முழிச்சிட்டு இருக்கிறதால நம்ம சங்கத்த சேர்ந்த அனைவரும் சைட்ல இருக்கிற Poll-ல ஒரு பட்டன அமுக்கும்படி கேட்டு கொ(ல்)ள்கிறேன்..

நன்றி! நன்றி!! நன்றி!!!


உங்களது ஆசிர்வாதத்தை எதிர்பார்த்து
திலீப்