Wednesday, April 8, 2009

அயன் - மற்றுமொரு கமர்ஷியல் மசாலா!

இது என்னோட முந்தின பதிவு மாதிரி காமெடி பதிவு இல்ல.. படத்த போன வாரம் பார்த்துட்டு வந்து என்னோட கருத்த சொல்றேன்.. நீங்க உங்க கருத்தையும் சொல்லுங்க..

போன வாரம் எப்படியோ பிளாக்ல டிக்கெட் வாங்கிட்டு போய்ட்டோம் நானும் என் நண்பனும்.. நம்ம ஏரியால நம் தமிழ் மக்கள் கொஞ்சம் அதிகம்ல..

ஆனா போன உடனே படத்த போட்டதும் ஒரு ஆறுதல்.. டொகும்ன்ட்ர்யும், விளம்பரமும் போட்டு அறுக்காம avm, sun pictures லோகோஸ் வந்ததும் விசில் ஆரம்பிச்சது.. கிளைமாக்ஸ் வரைக்கும் நிக்கல.. அவ்வளவு பக்க கமர்ஷியல்..

இந்த படத்தோட கதை (ரொம்ப பெருசா இல்லைனாலும்) இந்நேரம் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.. அதனால நான் கதை பத்தி பேச போறதில்ல..
இந்த மாதிரி படத்துக்கு தேவையான கதை.. அவ்ளோ தான்...
படத்தோட
ப்ளஸ்..

சூர்யா.. சூர்யா.. சூர்யா..

அவர் எந்த கேரக்டரும் செய்வாருன்னு இன்னொரு முறை காட்டி இருக்கார்..
அவர் செய்ற action, comedy, stunt, dance, style, dressing எல்லாமே சூர்யா சூர்யா தான்னு சொல்லும்..

அப்புறம் படத்துல வர்ற stunts.. சும்மா சொல்ல கூடாது congo-ல நடக்கிற அந்த ஃபைட் சீன் சூப்பரா இருக்கும்.. படம் முழுவதும் சேசிங், கடத்தல்னு விறுவிறுப்பா போறதால போர் அடிக்காம போகுது..

அப்புறம் இன்னொரு ப்ளஸ் பாடல்கள்.. எனக்கு ஹனி, ஹனி தவிர எல்லா பாடும் புடிசிருண்டது.. நெஞ்சே நெஞ்சே பாடல் ஹிந்தி கஜினி ல வர்ற குஸாரிஷ் பாட்டு மாதிரி இருந்தாலும் சூர்யா தமன்னா நல்லா பண்ணி இருந்தாங்க..

படத்தோட பெரிய ப்ளஸ் ஒளிப்பதிவு.. கே வி ஆனந்த் டைரக்ட் பன்னதாலோ என்னவோ ரொம்பவே நல்லா இருந்தது..

தமன்னா கொடுத்த வேலைய ரொம்பவே சூப்பரா பண்ணி இருந்தாங்க.. வெயிலுக்கு ரொம்ப இதம்.. :P

சொல்ற மாதிரி இன்னொரு கேரக்டர்னா நம்ம விஜய் டிவி ஜெகன்.. நல்லா பண்ணி இருந்தார்..

டிரெக்ஷன் நல்லா பண்ணி இருந்தார்.. கனா கண்டேன் அளவுக்கு இல்லனாலும் ஓகே..


இப்போ படத்தோட மைனஸ்..

பெரிய மைனஸ்னா படத்துல வர்ற cliche-கள்.. அடுத்த சீன் இது தான்.. இவர் தான் காட்டி கொடுப்பார்.. அம்மா செண்டிமெண்ட்.. இன்டெர்வல்க்கு அப்புறம் ஹீரோயின் காணாம போறது.. தேவை இல்லாத எடத்துல item song..இப்படி நிறைய..

அப்புறம் re-ரெகார்டிங்.. சம்மந்தமே இல்லாம கிளைமாக்ஸ்ல ஒரு மியூசிக் போட்டிருப்பார் பாருங்க.. செம காமெடி.. ஹாரிஸ் re-ரெகார்டிங்ல இன்னும் கொஞ்சம் மெனகெடலாம்..

பிரபு ஒரே மாதிரி கேரக்டேர்ல நடிக்கிற மாதிரி இருக்கு..

இன்னொரு பெரிய மைனஸ் வில்லன்.. அவர பார்த்த காமெடி தான் வருது.. ப்ரித்விராஜ வில்லனா அறிமுக படுதினவர் இதுல கோட்டை விட்டுட்டார்..


மொத்ததுல ஒரு மூணு மணி நேரம் ஜாலியா இருந்துட்டு வரலாம்.. சூர்யாக்காகவே ஒரு முறை கண்டிப்பா பார்க்கலாம்..

4 comments:

 1. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in

  ReplyDelete
 2. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete
 3. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete

பின்னூட்டத்துல பின்னுங்க..